திங்கள், 7 மே, 2012

பிரியாணி என்ற பெயரில் ஒரு ஆப்பு !

இந்த முறை அவசர வேலையாக ஊருக்கு சென்றிருந்த பொழுது எங்கு  பார்த்தாலும் பிரியாணி கடைகள் தான். எங்கு திரும்பினாலும் தலைப்பா  கட்டு பிரியாணி அப்படின்ற பெயர் பலகைதான் கண்ணில் படுகின்றது. நாம வேற வளைகுடா நாட்டில் இருந்து பிரியாணி சாப்பிட்டு பழகிட்டோமா பிரியாணி அப்படின்ற போர்ட பார்த்ததுமே நம்ம ஊர்ல  பிரியாணி அப்படிங்குற பெயர்ல வைக்கபடும் ஆப்பை பற்றி தெரியாம  நம்பி ஒரு கடைக்குள்ள போயிட்டேன்.  



பிரியாணி அப்படிங்குற பெயர்ல மஞ்சள் கலரும் ஆரஞ்சு கலரும் கலந்த ரைஸ்  ஒரு பிளேட்ல கொண்டு வந்து வச்சாங்க பாருங்க எண்டா இந்த பிறவி எடுத்தோம்  வறுத்த படுற அளவுக்கு ஒரு மரண பிரியாணி. தப்பு தப்பு அத பிரியாணி ன்னு சொன்னதுக்கு மன்னிச்சிருங்க புளி கலக்காத புளி சொருன்னு தான்  சொல்லணும் ஏன்னா அந்த பிரியாணி புளிக்கவில்லை. பிரியாணி  புளிகலன்ர குறைய அவங்க குடுத்த தைறு வெங்காயம் தீர்த்து வைத்து விட்டது. அந்த அளவுக்கு புளிப்பு. இதுக்கு 80 ருபாய் பில்லு வேற கொடும. 




அப்ப முடிவு பண்ணினேன் நம்ம மக்கள் இந்த மரணவிலாஷ்களில்  அவர்கள் பிரியாணி அப்படின்ற பெயர்ல குடுக்குற மொக்க பிரியாணிய  சாபிட்டுக்கிட்டு இதுதான் பிரியாணின்னு நம்பிகிட்டு இருக்காங்க  அவங்களுக்கு உண்மையிலேயே பிரியாணின்னா என்னனு புரிய வைக்கணும் அதுக்காக பிரியாணின்னா என்ன அத எப்படி செய்யனும்னு  வித விதமா பதிவிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாலு பேருக்கு  நல்லது நடக்கும்ன்னா எதுவும்  தப்பில்லை. நான் சொல்றது சரிதானே.    

  

1 கருத்து:

  1. பெயரில்லா7 மே, 2012 அன்று 2:05 PM

    சகோதரா
    முஸ்லீம்கள் விசயத்தில் மூக்கு உடைந்த சுப்ரமணிய சாமி..!
    http://nallavandaa.blogspot.com/2012/01/blog-post_2336.html போன்ற நம்மவர் பதிவுகள் எங்கே சகோதரா?
    அனைத்தினையும் அழித்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு